ADDED : ஏப் 18, 2026 04:27 PM

கடலுார்: கடலுார் சட்டசபை தொகுதியில் போட்டியிடும் காங்., வேட்பாளர் சந்திரசேகரன் தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
நேற்று காலை வண்டிப்பாளையம் மெயின்ரோடு கரையேற விட்டக்குப்பம் தெரு, சூரசம்ஹாரதெரு, அம்பேத்கர் நகர், சரவணா நகர், கமலம் தியேட்டர் ஆகிய இடங்களில் வேட்பாளர்
பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது, வேட்பாளர் சந்திரசேகரன் பேசியதாவது:
மதச்சார்பற்ற கூட்டணி என்பது மக்களுக்கான கூட்டணி. தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தமிழக மக்களின் வளர்ச்சிக்காக ஏராளமான திட்டங்களை தீட்டி வருகிறார்.
அதில் ஒன்றுதான், ஒவ்வொரு மகளிருக்கும் 5 ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. நீங்கள் எல்லாம் ஏதாவது ஒரு பயன் அடைந்திருப்பீர்கள். மக்களுக்கான திட்டம் தொடர மீண்டும் ஸ்டாலின் முதல்வராக எனக்கு கை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அவருடன் துணை மேயர் தாமரைச்செல்வன், ராஜேந்திரன், சுந்தர், தே.மு.தி.க., மாநகர செயலாளர் வல்லரசு சரவணன், ஒன்றிய செயலாளர் கலாநிதி, தொகுதி பொறுப்பாளர் சித்தநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
