ADDED : ஏப் 15, 2026 05:03 PM

அ நிறம் | அளவு
கடலுார்: கடலுார் தொகுதியில் காங்., வேட்பாளர் சந்திரசேகர் ஓட்டு சேகரித்தார்.
கடலுார் தொகுதியில் போட்டியிட காங்., வேட்பாளர் சந்திரசேகருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அவர் பொதுமக்களிடத்தில் ஆதரவு திரட்டி வருகிறார்.
நேற்று அவர் கோண்டூர் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். தொடர்ந்து நத்தப்பட்டு, இந்திரா நகர், குறிஞ்சி நகர், ரெயின்போ நகர், தோட்டப்பட்டு, மாரியம்மன் கோவில்தெரு, மருதாடு, வெள்ளப்பாக்கம், காராமணிக்குப்பம், வரக்கால்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் ஓட்டு சேகரித்தார்.
அவருடன் அய்யப்பன் எம்.எல்.ஏ., புகழேந்தி, துணை மேயர் தாமரைசெல்வன், காங்., மாவட்டத் தலைவர் ரங்கமணி, தே.மு.தி.க., நிர்வாகி சரவணன், இந்திய கம்யூ., குளோப், மா.கம்யூ., மாதவன், விசி மண்டல நிர்வாகி முருகையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
