/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ராகுலுக்கு கொலை மிரட்டல் போலீசில் காங்., புகார்
/
ராகுலுக்கு கொலை மிரட்டல் போலீசில் காங்., புகார்
ADDED : செப் 28, 2024 06:52 AM

கடலுார் : லோக்சபா எதிர்கட்சி தலைவர் ராகுலுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
கடலுார் திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்தில், மாநகர காங்., தலைவர் வேலுசாமி தலைமையில் கொடுத்துள்ள மனு:
பா.ஜ., மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்த பொறுப்பாளர்கள், தங்கள் அரசியலமைப்பு பொறுப்புகளை மறந்து லோக் சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.
மாநில பொதுக்குழு உறுப்பினர் குமார், மாவட்ட பொருளாளர் ரமேஷ், மாவட்ட பொது செயலாளர் காமராஜ், தொகுதி தலைவர் கிருஷ்ணமூர்த்தி உட்பட பலர் உடனிருந்தனர்.