/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பேரூராட்சி துணை சேர்மனாக காங்., கவுன்சிலர் தேர்வு
/
பேரூராட்சி துணை சேர்மனாக காங்., கவுன்சிலர் தேர்வு
ADDED : ஜூலை 25, 2025 11:03 PM

விருத்தாசலம்; மங்கலம்பேட்டை பேரூராட்சி துணைத் தலைவராக காங்., கவுன்சிலர் வேல்முருகன் தேர்வு செய்யப்பட்டார்.
மங்கலம்பேட்டை பேரூராட்சி துணைத் தலைவராக இருந்த தாமோதரன், கடந்தாண்டு உடல்நலக்குறைவால் இறந்தார். இதையடுத்து, துணைத் தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல், பேரூராட்சி மன்ற அலுவலகத்தில் நேற்று நடந்தது. செயல் அலுவலர் சண்முகசுந்தரி, தேர்தல் அலுவலராக பணிபுரிந்து தேர்தலை நடத்தினார். துணைத் தலைவர் பதவிக்கு 14வது வார்டு காங்., கவுன்சிலர் வேல்முருகன் மட்டும் மனுதாக்கல் செய்திருந்த நிலையில், அவர் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.துணைத் தலைவர் வேல்முருகனுக்கு வெற்றிச்சான்றிதழ் வழங்கப்பட்டது. பேரூராட்சி தலைவர் சம்சாத் பாரி இப்ராஹிம், தி.மு.க., பேரூராட்சி செயலாளர் செல்வம், காங்., மாவட்ட பொருளாளர் ராஜன், வட்டார தலைவர் ராவணன், வி.சி., மண்டல செயலாளர் ராஜ்குமார் உடனிருந்தனர். இந்திய குடியரசு கட்சி மாநில பொதுச் செயலாளர் மங்காபிள்ளை, ம.ம.க., அசன் முகம்மது, வி.சி., ஒன்றிய செயலாளர் சுப்புஜோதி வாழ்த்து தெரிவித்தனர்.

