ADDED : ஏப் 18, 2025 05:00 AM

அ நிறம் | அளவு
கடலுார்: கடலுார் தலைமை தபால் நிலையம் அருகில், மாவட்ட காங்., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் திலகர் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் வழக்கறிஞர் சந்திரசேகர் கண்டன உரையாற்றினார்.
மாநில செயற்குழு உறுப்பினர் மணி, சபியுல்லா, ராமச்சந்திரன், மீனவர் பிரிவு கார்த்திகேயன், மாவட்ட துணை தலைவர் ஆறுமுகம், மாநில பொதுச் செயலாளர் ராமராஜ், வட்டாரத் தலைவர்கள் ராஜா, ராமகிருஷ்ணன், அலெக்ஸ், ராம்கிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறையின் நடவடிக்கைகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
