/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வடலுாரில் காங்., நிர்வாகி இல்ல திருமண வரவேற்பு அகில இந்திய பொதுச் செயலாளர் பங்கேற்பு

ADDED : ஜன 17, 2025 06:24 AM

கடலுார்: வடலுாரில் இன்று காங்., மாநில பொதுச் செயலாளர் இளஞ்செழியன் இல்லத் திருமண வரவேற்பு விழா நடக்கிறது.
தமிழக காங்., மாநில பொதுச் செயலாளர் நெய்வேலி இளஞ்செழியன்-சித்ரா தம்பதி மகள் இலக்கியா, பெலிக்ஸ் ஆகியோரின் திருமண வரவேற்பு வடலுார் மங்கையர்கரசி திருமண மண்டபத்தில் இன்று (17ம் தேதி) மாலை 6:30 மணிக்கு நடக்கிறது.
மணமக்களின் பெற்றோர் வரவேற்கின்றனர்.
அகில இந்திய காங்., பொதுச் செயலாளர், முன்னாள் எம்.பி., செல்லக்குமார் தலைமையில் நடக்கும் விழாவில், முன்னாள் மாநிலத் தலைவர் அழகிரி, எம்.பி., விஷ்ணு பிரசாத், ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., ஆகியோர் வாழ்த்திப் பேசுகின்றனர்.
விழாவில், அரசியல் கட்சி பிரமுகர்கள், தொழிலதிபர்கள், வர்த்தகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகின்றனர்.