ADDED : டிச 20, 2024 04:40 AM

சிதம்பரம்: சிதம்பரத்தில், தெற்கு மாவட்ட காங். மற்றும் நகர காங்., சார்பில், மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிதம்பரம் வடக்கு மெயின் ரோட்டில் அம்பேத்கர் சிலை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்நாடு காங். கமிட்டி முன்னாள் தலைவர் அழகிரி தலைமை தாங்கினார்.
மாவட்ட தலைவர் செந்தில்நாதன், மாநில செயலாளர் சித்தார்த்தன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ராதா, நகர தலைவர் தில்லை மக்கின், மாநில பொதுக்குழு உறுப்பினர் டாக்டர் செந்தில்வேலன், உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
விருத்தாசலம்
ஆர்ப்பாட்டத்திற்கு ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். இதில், நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். அமித்ஷாவை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டம் மைக் இல்லாமல் நடந்ததால் போக்குவரத்து போலீசார் மைக் மூலம் போக்குவரத்தை சீர் செய்தால் ஆர்ப்பாட்டத்திற்கு இடையூறு ஏற்பட்டது.
எம்.எல்.ஏ., ராதாகிருஷ்ணனும் , சப் இன்ஸ்பெக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் அங்கிருந்தவர்கள் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.