/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிதம்பரத்தில் காங்., ஆர்ப்பாட்டம்
/
சிதம்பரத்தில் காங்., ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 29, 2024 11:52 PM

சிதம்பரம்: சிதம்பரத்தில், தமிழக மீனவர்களை கைது செய்யும் இலங்கை அரசை கண்டிக்காத மத்திய அரசை கண்டித்து, காங்., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்பாட்டத்திற்கு கடலுார் தெற்கு மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் ராஜாசம்பத்குமார், வட்டார தலைவர்கள் சுந்தராஜன், செழியன், ஜோதிமணி முன்னிலை வகித்தனர். சிதம்பரம் நகர தலைவர் தில்லை மக்கின் வரவேற்றார். மாநில பொதுக்குழு உறுப்பினர் செந்தில்வேலன், மாநில செயலாளர் சித்தார்த்தன், மாநில செயலாளர் ஜெயச்சந்திரன் கண்டன உரையாற்றினர்.
பார்த்தீபன், தில்லை குமார், சக்கரபாணி, குமராட்சி ரெங்கநாதன், வீரப்பன், வைத்தியநாதசாமி, சீனுராஜேந்திரன், நாகராஜ், குமார், சிவசக்திராஜா, சர்மா, சசிகுமார், மகளிரணி தில்லைசெல்வி, ஜனகம், அழகர்மாலா, அஞ்சம்மா, இந்திரா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மாவட்ட இளைஞரணி தலைவர் அன்பரசன் நன்றி கூறினார்.

