ADDED : ஜன 31, 2026 06:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி: புவனகிரி ஒன்றிய அலுவலகம் முன்பு காங்., கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் ஏற்பட்டுள்ள குளறுபடியால் மக்கள் மிகுந்த பாதிப்படைவதாகவும்,
காங்.,ஆட்சியில் கொண்டு வந்த திட்டத்தை மத்தி அரசு முடக்க நினைப்பதாக கூறி, காங்., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் புவனகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் நடைபெற்றது.
வட்டார தலைவர் லட்சுமணன் தலைமை தாங்கினார். மாவட்டத் துணைத் தலைவர் விநாயகர், கவுன்சிலர் கிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். மாநில பொதுக்குழு உறுப்பினர் செந்தில்வேலன் சிறப்பு விருந்தினராக கண்டன உரையாற்றினார். கட்சி நிர்வாகிகள் நாகராஜன், அருள் ஜோதி, குப்புசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிர்வாகி சேகர் நன்றி கூறினார்.

