/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிதம்பரத்தில் காங்., ஆர்ப்பாட்டம்
/
சிதம்பரத்தில் காங்., ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 26, 2025 04:55 AM

சிதம்பரம் : அசாம் மாநிலத்தில், ராகுல் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை கண்டித்து, சிதம்பரத்தில் காங்., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
கடலுார் தெற்கு மாவட்ட காங்., மற்றும் நகர காங்., சார்பில் சிதம்பரம், வடக்கு வீதி தபால் நிலையம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமை தாங்கினார். நகர தலைவர் மக்கின் வரவேற்றார். மாநில பொதுச் செயலாளர் சித்தார்த்தன், ஜெயச்சந்திரன், சாம்பமூர்த்தி, மணிமொழி முன்னிலை வகித்தனர்.
லோக்சபா ஒருங்கிணைப்பாளர் ரங்கபூபதி, மண்டல ஒருங்கிணைப்பாளர் வக்கீல் சந்திரசேகர் ஆகியோர் சிறப்புரையாற்றினார். காங்., நிர்வாகிகள் ராஜா சம்பத்குமார், குமார், சுந்தர்ராஜன், செழியன், ரவிச்சந்திரன், விநாயகம், வெங்கடேசன், குமராட்சி ரங்கநாதன், சின்ராஜ், அபுதாஹிர், மகளிரணி அஞ்சம்மாள், இந்திரா, ராதா, டாக்டர் மஞ்சுளா, அழகர் மாலா, நந்தினி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெமினி ராதா நன்றி கூறினார்.

