/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுாரில் காங்., கையெழுத்து இயக்கம்
/
கடலுாரில் காங்., கையெழுத்து இயக்கம்
ADDED : செப் 25, 2025 04:45 AM

கடலுார் : கடலுார் மத்திய மாவட்ட காங்., மற்றும் இளைஞர் காங்., சார்பில் மத்திய அரசின் தேர்தல் ஆணையம் ஓட்டு திருட்டை கண்டித்து கடலுாரில் நேற்று கையெழுத்து இயக்கம் நடந்தது.
மாவட்ட இளைஞர் காங்., தலைவர் அருள் பிரகாஷ் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் வழக்கறிஞர் சந்திரசேகரன், மாநில பொதுச் செயலாளர் கலைச்செல்வன் முன்னிலை வகித்தனர். வார் ரூம் இணைத் தலைவர் சிவக்குமார் வரவேற்றார்.
இளைஞர் காங்., மாவட்ட துணைத் தலைவர் ரஞ்சித், முன்னிலை வகித்தனர். கிருஷ்ணமூர்த்தி மாவட்ட துணைத் தலைவர் மீனவர் பிரிவு மாவட்டத் தலைவர் கடல் கார்த்திகேயன், மாவட்ட துணைத் தலைவர் தரணிதரன், மகளிர் தலைவர் சாந்தி, ராஜ்பார்த்திபன்பாண்டுரங்கன், கல்பனா சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் ரஹீம், ஆறுமுகம், தொழிலாளர் பிரிவுமாவட்டத்தலைவர் சுகு தேவ், மாவட்ட செயலாளர்கள் சக்கரவர்த்தி முத்துகிருஷ்ணன், அசோக், அப்துல் காதர், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் கலையரசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.