/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விருதையில் காங்., நடைபயணம் போலீஸ் தடுத்ததால் பரபரப்பு
/
விருதையில் காங்., நடைபயணம் போலீஸ் தடுத்ததால் பரபரப்பு
விருதையில் காங்., நடைபயணம் போலீஸ் தடுத்ததால் பரபரப்பு
விருதையில் காங்., நடைபயணம் போலீஸ் தடுத்ததால் பரபரப்பு
ADDED : அக் 03, 2024 04:51 AM
விருத்தாசலம், : காந்தி ஜெயந்தி விழாவையொட்டி, நடைபயணம் மேற்கொண்ட காங்., கட்சியினரை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
விருத்தாசலத்தில், காந்தி ஜெயந்தி, காமராஜர் நினைவு நாளையொட்டி, அய்யனார் கோவில் தெருவில் உள்ள காந்தி சிலைக்கு காங்., கட்சியினர் மாலை அணிவித்தனர். பின்னர், ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் பஸ் நிலையத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்க நடைபயணமாக சென்றனர். நகராட்சி அலுவலகம் அருகே சென்றபோது, டி.எஸ்.பி., கிரியா சக்தி அவர்களை தடுத்து நிறுத்தி, நடைபயணம் மேற்கொள்ள அனுமதி இல்லை. வாகனத்தில் செல்லுமாறு, எம்.எல்.ஏ.,விடம் கூறினார். அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
பின்னர், அங்கிருந்து புறப்பட்ட காங்., கட்சியினர் நடையணமாக பஸ் நிலையத்திற்கு சென்று காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
நிகழ்ச்சிக்கு பிறகு எம்.எல்.ஏ., கூறுகையில், தமிழகம் முழுவதும் காங்., நடைபயணத்திற்கு போலீசார் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விருத்தாசலத்தில் மட்டும் தொடர்ந்து அனுமதி மறுக்கப்படுகிறது. இதேநிலை நீடித்தால், போலீசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார்.