/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விருத்தாசலத்தில் கொள்ளையடிக்க சதி திட்டம்; வாலிபர்கள் 6 பேர் கைது
/
விருத்தாசலத்தில் கொள்ளையடிக்க சதி திட்டம்; வாலிபர்கள் 6 பேர் கைது
விருத்தாசலத்தில் கொள்ளையடிக்க சதி திட்டம்; வாலிபர்கள் 6 பேர் கைது
விருத்தாசலத்தில் கொள்ளையடிக்க சதி திட்டம்; வாலிபர்கள் 6 பேர் கைது
ADDED : ஜன 22, 2024 12:53 AM
விருத்தாசலம் : விருத்தாலத்தில் கொள்ளையடிக்க சதி திட்டம் தீட்டிய வாலிபர்கள் ஆறுபேரை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் நேற்று விருத்தாசலம் மணலுார் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ரயில்வே மேம்பாலம் பகுதியில் 6 பேர் சந்தேகத்திற்கு இடமாக நின்றனர். அவர்களை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர்.
இதில், சந்தேகமடைந்த போலீசார் வாலிபர்கள் ஆறு பேரையும் விருத்தாசலம் போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அதில், அவர்கள் கூட்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட இருந்தது தெரிய வந்தது.
மேலும் விசாரணையில், அவர்கள் கோ.ஆதனுார் கிராமத்தைச் சேர்ந்த ஜெகதலபிரதாப் மகன் தங்கதுரை, 24; கொளஞ்சி மகன் வீரசேகர், 28; ஆனந்தேஸ்வரன் மகன் கோபிநாத், 21; விருத்தாசலம் ஆலடி ரோடு, துர்க்கை நகரை சேர்ந்த மணிமாறன் மகன் ஆகாஷ், 19; குப்பநத்தம் பழனிவேல் மகன் தமிழ்செல்வன், 25; கார்குடல் பாஸ்கர் மகன் சூர்யா, 25, என்பது தெரியவந்தது.
விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து ஆறுபேரையும் கைது செய்தனர்.