ADDED : நவ 26, 2026 09:57 PM

கடலுார்: மாவட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் அரசியலமைப்பு தினம் கொண்டாடப்பட்டது.
கடலாரில் காங்.,. சார்பில் மத்திய மாவட்ட தலைவர் ரங்கமணி தலைமை தாங்கி, அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாநில செயலாளர் சந்திரசேகரன் முன்னிலை வகித்தார். மாவட்ட அரசியல் விவகார குழு உறுப்பினர் வேலுமணி, யசோதரன், பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, துணைத் தலைவர்கள் ஆனந்தன், ராஜா, பொதுச் செயலாளர் ராமராஜ், மீனவரணி தலைவர் கார்த்திகேயன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருத்தாசலம்:
இந்திய குடியரசு கட்சி பாலக்கரையில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் கதிர்வேல் தலைமை தாங்கினார். பொருளாளர் கணேசன், ஒன்றிய தலைவர்கள் ஜெயசீலன், சக்திவேல், நகர தலைவர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச்செயலாளர் மங்கா பிள்ளை, அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
