தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/அரசியலமைப்பு தின கருத்தரங்கம்

அரசியலமைப்பு தின கருத்தரங்கம்

அரசியலமைப்பு தின கருத்தரங்கம்


UPDATED : நவ 27, 2026 07:52 PM

ADDED : நவ 27, 2026 07:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 27, 2026 07:52 PM ADDED : நவ 27, 2026 07:52 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிதம்பரம்: சிதம்பரத்தில் பல்வேறு அமைப்புகள் சார்பில் அரசியலமைப்பு தின நடந்தது.

கருத்தரங்கிற்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாவட்ட இணை செயலாளர் ராகவேந்திரன் தலைமை தாங்கினார். அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்க மாவட்ட தலைவர் ஆழ்வார் வரவேற்றார்.

சிறப்பு விருந்தினரான தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ., 'எஸ்.ஐ.ஆர். மக்கள் மீது ஒரு யுத்தம்' என்ற தலைப்பிலும், மனிதம் அமைப்பின் மாநில செயலாளர் ரமேஷ்பாபு, அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்போம்' என்ற தலைப்பில் பேசினர்.

மூசா, கவிஞர் பால்கி வாழ்த்துரை வழங்கினர். தொடர்ந்து, எஸ்.ஐ.ஆர். தொடர்பாக 'ரத்தம் இல்லாமல் ஓர் அரசியல் இனப்படுகொலை' என்ற தலைப்பிலான பிரசுரத்தை அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்க மாவட்ட தலைவர் சங்கரய்யா வெளியிட, சிதம்பரம் அனைத்து குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் கலியமூர்த்தி பெற்றுக்கொண்டார். வழக்கறிஞர்கள் சங்க மாவட்ட செயலாளர் செந்தில் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us