/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மேல்பட்டாம்பாக்கத்தில் கிடப்பில் போடப்பட்ட கழிவுநீர் கால்வாய் கட்டும் பணி
/
மேல்பட்டாம்பாக்கத்தில் கிடப்பில் போடப்பட்ட கழிவுநீர் கால்வாய் கட்டும் பணி
மேல்பட்டாம்பாக்கத்தில் கிடப்பில் போடப்பட்ட கழிவுநீர் கால்வாய் கட்டும் பணி
மேல்பட்டாம்பாக்கத்தில் கிடப்பில் போடப்பட்ட கழிவுநீர் கால்வாய் கட்டும் பணி
ADDED : ஜன 20, 2025 07:02 AM
நெல்லிக்குப்பம் : மேல்பட்டாம்பாக்கத்தில் அதிகாரிகள் அலட்சியத்தால் ஒரு கோடி மதிப்பில் கழிவுநீர் கால்வாய் கட்டும் பணி பாதியிலேயே நிற்கிறது.
நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சியில் உள்ள வீடுகள் கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்வதற்கு முறையான வாய்க்கால் வசதியில்லை. இதற்காக ஒரு கோடி ரூபாய் செலவில் கழிவுநீர் கால்வாய் கட்ட 8 மாதத்துக்கு முன் டெண்டர் விட்டு பணிகள் துவங்கியது. இந்த கால்வாயை மேல்பட்டாம்பாக்கத்தில் இருந்து விழுப்புரம் மாவட்டம் கலிஞ்சிக்குப்பம் செல்லும் சாலை ஓரம் கட்ட துவங்கினர். கால்வாய் கட்டிய வரை மேலே மூடி போட்டு மூடினர்.
கால்வாய் மூன்று கிலோமீட்டர் தூரத்துக்கு சென்று பெண்ணையாற்றில் கலப்பது மாதிரி முடிவு செய்துள்ளனர். ஆற்றில் கழிவுநீர் கலப்பதால் ஆற்றின் தூய்மை மற்றும் நிலத்தடிநீர் பாதிக்கும் என கலிஞ்சிக்குப்பம் பகுதி மக்கள் ஒரு மாதத்துக்கு முன் பணியை தடுத்து நிறுத்தினர். பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் அரசின் திட்டத்தை தடுக்க கூடாது. கோர்ட்டு மூலம் தான் தீர்வு காண வேண்டு மென சமாதானம் செய்தனர்.
அப்போது முதல் பணி நடக்கவில்லை. அந்த மக்கள் கோர்ட்டில் வழக்கு போட்டுள்ளதாக தெரிகிறது. இதுபற்றி பேரூராட்சி தலைவர் ஜெயமூர்த்தி கூறியதாவது யாரும் வழக்கு போட்டதாக எங்களுக்கு தகவல் இல்லை.கால்வாய் செல்லும் வழியில் பல இடங்களில் உறிஞ்சு குழிகள் அமைப்பதால் ஆற்றுக்கு செல்லும் போது தண்ணீர் தூய்மையாக செல்லும்.
எனவே எந்த பாதிப்பும் ஏற்படாது. பணி செய்த வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு சென்றிருப் பதால் பணிகள் பாதியிலேயே நிற்கிறது. அவர்கள் வந்தவுடன் பணியை துவக்கி விரைவில் முடித்து விடுவோம் என கூறினார். மக்கள் வரி பணத்தை பாழடிக்காமல் முறையாக கால்வாய் பணியை முடிக்க வேண்டும்.