தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பாரதி சாலையில் கட்டுமான பணி நிறுத்தம்:  வாகனங்கள் வழக்கம் போல் செல்ல ஏற்பாடு 

பாரதி சாலையில் கட்டுமான பணி நிறுத்தம்:  வாகனங்கள் வழக்கம் போல் செல்ல ஏற்பாடு 

பாரதி சாலையில் கட்டுமான பணி நிறுத்தம்:  வாகனங்கள் வழக்கம் போல் செல்ல ஏற்பாடு 


UPDATED : மே 17, 2026 05:26 PM

ADDED : மே 17, 2026 04:50 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 17, 2026 05:26 PM ADDED : மே 17, 2026 04:50 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலுார்: பாலம் கட்டுமான பணி நிறுத்தப்பட்டுள்ளதால் (மே 18) முதல் வழக்கம் போல் வாகனங்கள் செல்லலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

கடலுார் அண்ணா பாலம் அருகில் கெடிலம் ஆற்றின் குறுக்கே தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் 22 கோடியே 15 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய பாலம் கட்டப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக பாரதி சாலையில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி அருகில் நெடுஞ்சாலையின் இருபுறமும் குறுக்கே மழைநீர் செல்லும் வகையில் புதிதாக சிறிய பாலம் கட்ட கடந்த, 14 ம் தேதி பள்ளம் தோண்டும் பணி துவங்கியது.

இதன் காரணமாக கடலுார் பஸ் நிலையத்தில் இருந்து புதுச்சேரி, சென்னை, விழுப்புரம் மார்க்கமாக செல்லும் பஸ் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் ஜவான்ஸ்பவன் புறவழிச்சாலை வழியாக திருப்பி விடப்பட்டது. சென்னை, புதுச்சேரி, விழுப்புரம் மார்க்கத்தில் இருந்து வாகனங்கள் வழக்கம் போல, பாரதி சாலை வழியாக செல்கிறது.

இதற்கிடையே, பாலம் கட்டுமான பணி நடக்கும் இடத்தில் மின் இணைப்புகள், பாதாள சாக்கடை இணைப்பு, குடிநீர் குழாய் செல்வதால் கட்டுமான பணியில் தடை ஏற்படுவதாக தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்தனர்.

இதையடுத்து மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில், பாலம் கட்டுமான பணி நேற்று நிறுத்தப்பட்டு, பள்ளத்தை மூடும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். (18ம் தேதி) முதல் கடலுார் பஸ் நிலையத்தில் இருந்து புதுச்சேரி, சென்னை, விழுப்புரம் மார்க்கமாக செல்லும் பஸ் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் பாரதி சாலையில் வழக்கம் போல் செல்லலாம் என, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us