ADDED : செப் 04, 2026 06:41 PM
அ நிறம் | அளவு
விருத்தாசலம்: கட்டட வேலை செய்த வாலிபர், தவறி விழுந்து இறந்தார்.
கம்மாபுரம் அடுத்த மும்முடிசோழகன் கிராமத்தை சேர்ந்தவர் பழனிசாமி மகன் சஞ்சய், 24. சித்தாள் வேலை செய்து வந்த இவர், நேற்று முன்தினம் பெரியகண்டியங்குப்பம் கிராமத்தில் உள்ள கணபதி என்பவரது வீட்டின் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, திடீரென வலிப்பு ஏற்பட்டு, கட்டடத்தில் இருந்து கீழே விழுந்து படுகாயமடைந்தார்.
உடன், அவரை சக தொழிலாளர்கள் மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக கூறினர்.
இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.
