தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பஸ் மோதி கட்டட தொழிலாளி பலி

 பஸ் மோதி கட்டட தொழிலாளி பலி

 பஸ் மோதி கட்டட தொழிலாளி பலி


ADDED : மார் 15, 2026 03:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 15, 2026 03:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிதம்பரம்: பைக் மீது பஸ் மோதிய விபத்தில் கட்டட தொழிலாளி உயிரிழந்தார்.

சிதம்பரம் அடுத்துள்ள கோவிலாம்பூண்டி காரப்பாடி பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் சேகர், 45; கொத்தனார்; திருமணம் ஆகி மனைவி மற்றும் மகன், மகள் உள்ளனர்.

நேற்று மாலை சேகர் தனது பைக்கில், சிதம்பரம்- சீர்காழி புறவழிச்சாலையில் , லால்புரத்தை சாலையில் கடக்க முயன்றார்.

அப்போது காரைக்காலில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற அரசு பஸ் எதிர்பாராத விதமாக சேகர் ஓட்டி வந்த பைக் மீது மோதியது.

இதில் துாக்கி வீசப்பட்ட சேகர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து தகவலின் பேரில் , தாலுகா போலீசார் விரைந்து சென்று, சேகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, சிதம்பரம், அரசு காமராஜர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us