வேப்பூர் : நல்லுார் ஒன்றிய தி.மு.க., ஓட்டுச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் வேப்பூர் கூட்டுரோட்டில் நடந்தது.
நல்லுார் வடக்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் பாவாடை கோவிந்தசாமி தலைமை தாங்கினார். தி.மு.க., மாணவரணி மாவட்ட அமைப்பாளர் சதீஷ், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை அமைப்பாளர் அசோக்குமார், நல்லுார் ஒன்றிய அவைத் தலைவர் கருப்பையா முன்னிலை வகித்தனர்.
இளைஞரணி ஒன்றிய துணை அமைப்பாளர் பாபு வரவேற்றார். விருத்தாசலம் தொகுதி மேற்பார்வையாளர் சந்திரசேகர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.
தி.மு.க., ஒன்றிய துணைச் செயலர் அன்புக்குமரன், மாரிமுத்தாள் குணா, ஒன்றிய பொருளாளர் வெங்கடாசலம், இளைஞரணி ஒன்றிய அமைப்பாளர் தனசேகர், இளைஞரணி ஒன்றிய துணை அமைப்பாளர்கள் சூர்யா, குணா, தி.மு.க., நிர்வாகி மாரிமுத்து பங்கேற்றனர்.
கூட்டத்தில், வரும் சட்டசபை தேர்தலில் ஓட்டுகளை சேகரிப்பதற்கான பணிகளில் ஈடுபடுவது, தி.மு.க., அரசின் சாதனை திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.