ADDED : ஏப் 05, 2025 05:30 AM

அ நிறம் | அளவு
விருத்தாசலம்; விருத்தாசலம் அடுத்த சிறுவரப்பூர் சிவபாரதி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் மாணவர்களின் அன்னையர் மற்றும் ஆசிரியர்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது.
பள்ளி செயலர் சரண்யா சிவனேசன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர்கள் சசிகலா, உமா ஆகியோர் முன்னிலை வகித்தனர். அறிவியல் ஆசிரியர் கவுசல்யா வரவேற்றார். மாணவர்களின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் இடையே கலந்துரையாடல் நடந்தது.
அதில், மாணவர்கள் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்பதால் ஏற்படும் கல்வி நலன் குறித்து விவாதிக்கப்பட்டது.
ஆசிரியர் அஞ்சம்மாள் நன்றி கூறினார்.
