ADDED : மார் 01, 2026 04:48 AM
புதுச்சத்திரம்: மாசிமக ஆலோசனைக்கூட்டத்தில் ஏராள மானோர் கலந்து கொண்டனர்.
இந்தாண்டு மாசி மகத்தையொட்டி, புதுச்சத்திரம் போலீசார் சார்பில், ஆலோசனைக் கூட்டம் மேட்டுப்பாளையத்தில் நேற்று மாலை நடந்தது.
கூட்டத்திற்கு இன்ஸ்பெக்டர் பாரதி தலைமை தாங்கினார். சிதம்பரம் டி.எஸ்.பி., பிரதீப் பங்கேற்று, ஆலோசனைகள் வழங்கினார்.
இதில், அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் மட்டுமே, தீர்த்தவாரிக்கு செல்ல வேண்டும்; மது அருந்திவிட்டு ஊர்வலத்தில் கலந்து கொள்ளக்கூடாது; கடற்கரையில் இறங்குவதற்கு தடை விதிக்கப்பட்டால், அதை கடைபிடிக்க வேண்டும்; என்பன உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
இந்த கூட்டத்தில் சாமியார்பேட்டை, சின்னாண்டிக்குழி, பெரியக்குப்பம், பேட்டோடை, அய்யம்பேட்டை, காயல்பட்டு, தீர்த்தனகிரி, கம்பளிமேடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த, கிராம நிர்வாகிகள் பங்கேற்றனர்.
