ADDED : மார் 13, 2026 05:48 AM
அ நிறம் | அளவு
புவனகிரி: புவனகிரி தாலுகா அலுவலகத்தில் சட்டசபை தேர்தல் குறித்த அலுவலர்கள் சிறப்பு ஆலோசனை மற்றும் அறிமுக கூட்டம் நடந்தது.
துணை தாசில்தார் வேலுமணி வரவேற்றார். உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தமிழ் செல்வன், ராமதாஸ் முன்னிலை வகித்தனர். தேர்தல் நடத்தும் அலுவலர் தங்கமணி சிறப்பு விருந்தினராக பங்கேற்று தேர்தல் நேரத்தில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசனைகள் வழங்கினார்.
கூட்டத்தில் புவனகிரி, கீரப்பாளையம் மற்றும் கம்மாபுரம் ஒன்றியங்களைச் சேர்ந்த தேர்தல் பணியில் ஈடுபடும் பறக்கும் படை மற்றும் கண்காணிப்பு நிலையான குழுவினர் உள்ளிட்ட இதர பணியாளர்கள் பலர் பங்கேற்றனர்.
