ADDED : ஏப் 13, 2026 03:54 AM

அ நிறம் | அளவு
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு, சி.என்.பாளையம், குமளங்குளம், கொடுக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தி.மு.க., கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது.
சி.என்.பாளையத்தில் நடந்த கூட்டத்திற்கு, ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். ஒன்றிய துணை செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட விவசாய சங்க தலைவர் வைத்திலிங்கம், ம.தி.மு.க., ஒன்றிய செயலாளர் ராமலிங்கம் முன்னிலை வகித்தனர்.
கடலுார் கிழக்கு மாவட்ட பொருளாளர் கதிரவன் கலந்து கொண்டு பேசினார்.
