ADDED : மார் 11, 2024 04:30 AM
சேத்தியாத்தோப்பு, : சேத்தியாத்தோப்பு அடுத்த சி.சாத்தமங்கலம், கீரப்பாளையம் வேளாண் உதவி இயக்குனர் அலுவ லகத்தில் விவசாயிகள், தொழில்நுட்ப வல்லுனர கள் குழு ஆலோசனை கூட்டம் நடந்தது.
கீரப்பாளையம் வேளாண் வட்டார அட்மா குழு தலைவர் சபாநாயகம் தலைமை தாங்கினார்.
வட்டார வேளாண் உதவி இயக்குனர் அமிர்தராஜ் முன்னிலை வகித்தார்.வட்டார வேளாண் அலுவலர் சிவப்பிரியன் பங்கேற்று ஒருங்கிணைந்தவளர்ச்சி திட்டம், நீர் பாசனதிட்டம் குறித்து பேசினார்.
வேளாண் பொறியியல் துறை உதவி பொறியாளர் வெங்கடேசன், கால்நடை உதவி மருத்துவர் அறிவுக்கரசு, வணிகவரித்துறை உதவி வேளாண் அலுவலர் லோகநாதன், மீன்வளத்துறை ஆய்வாளர் மயில்வாகனன் உள்ளிட்டோர் பேசினர். கூட்டத்தில் விவசாயிகளுக்கு தேவையான எதிர்காலத்திட்டங்கள், செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் அட்மா குழு உறுப்பினர்கள் விவசாயிகள், வேளாண், தோட்டக்கலை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஆனந்தசெல்வி, உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் சரவணன், அபிநயா, பயிர் அறுவடை பரிசோதர் வீராசாமி செய்திருந்தனர்.
