தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ தொடர் முழக்க ஆர்ப்பாட்டம்

 தொடர் முழக்க ஆர்ப்பாட்டம்

 தொடர் முழக்க ஆர்ப்பாட்டம்


ADDED : பிப் 11, 2026 03:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 11, 2026 03:41 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: விருத்தாசலம் பாலக்கரையில் சத்துணவு, அங்கன்வாடி கூட்டமைப்பு சார்பில் தொடர் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். மாநில ஒருங்கிணைப்பாளர் பரமசிவம் துவக்கி வைத்து பேசினார். மாநில சிறப்பு தலைவர் சீனுவாசன் சிறப்புரையாற்றினார். மாநில பிரசார செயலாளர் ஞானஜோதி, மாவட்ட நிர்வாகிகள் கிருஷ்ணகுமார், மணிதேவன் உட்பட பலர் பங்கேற்றனர்.

கூட்டத்தில், ஓய்வு பெற்ற சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கு, சென்னை ஐகோர்ட் தீர்ப்பின்படி அகவிலைப்படியுடன் ஓய்வூதியம் வழங்க வேண்டும். இளநிலை உதவியாளர் நிலையில் 19,500 ரூபாய் மற்றும் சமையலர், உதவியாளர்களுக்கு அலுவலக உதவியாளர் நிலையில் 15,700 ரூபாய் காலமுறை ஊதியம்,

காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us