/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தனியார் அனல்மின் நிலையம் முன்பு ஒப்பந்த தொழிலாளர்கள் முற்றுகை
/
தனியார் அனல்மின் நிலையம் முன்பு ஒப்பந்த தொழிலாளர்கள் முற்றுகை
தனியார் அனல்மின் நிலையம் முன்பு ஒப்பந்த தொழிலாளர்கள் முற்றுகை
தனியார் அனல்மின் நிலையம் முன்பு ஒப்பந்த தொழிலாளர்கள் முற்றுகை
ADDED : மே 08, 2025 01:35 AM

மந்தாரக்குப்பம்: ஊத்தங்கால் தனியார் அனல்மின் நிலையம் முன்பு ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நிரந்தர வேலை வழங்க கோரி முற்றுகை போராட்டம் நடந்தது.
மந்தாரக்குப்பம் அடுத்த ஊத்தங்கால் தனியார் அனல் மின் நிலையத்தில்(டாக்கா) ஒப்பந்த தொழிலாளர்கள் ஏராளமனோர் பணிபுரிந்து வருகின்றனர்.
இதில் என்.எல்.சி., முதல் சுரங்கத்திலிருந்து பெறப்படும் நிலக்கரியை வடலுார் பகுதியில் இருந்து ரயில் மூலம் ஊத்தங்கால் தனியார் அனல் மின் நிலையத்திற்கு ஏற்றி அனுப்பும் பணியில் 87 ஒப்பந்த தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர்.
தற்போது ரயில் மூலம் நிலக்கரி ஏற்றி அனுப்பும் பணி நிறுத்தப்பட்டு லாரிகள் மூலம் அனுப்பப்படுகிறது.
இதனால் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பணி வழங்க இயலாது என தனியார் ஒப்பந்த நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
இதில் பாதிக்கப்பட்ட ஒப்பந்த தொழிலார்கள் நேற்று காலை 10:00 மணியளவில் ஊத்தங்கால் தனியார் அனல் மின் நிலையம் முன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் நெய்வேலி டி.எஸ்.பி., ராதாகிருஷ்ணன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது டாக்கா தனியார் ஒப்பந்த நிறுவனத்திடம் பேசி சுமூக தீர்வு காணப்படும் என தெரிவித்தார். அதை தொடர்ந்து நேற்று மாலை வரை தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது