/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார் ஆக்கர் தெருவில் சாலைப்பணி திடீர் நிறுத்தம் கமிஷனரிடம் ஒப்பந்ததாரர் புகார்

ADDED : மே 14, 2025 11:42 PM

கடலுார்: கடலுாரில் சாலை போடும் பணியில் ஒப்பந்ததாரருக்கும், பொறியாளருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தால் பணி நிறுத்தப்பட்டது.
கடலுார் ராஜாம்பாள் நகர், ஆக்கர் தெருவில் மாஜி அமைச்சர் எம்.சி.சம்பத் வீடு உள்ளது. அதன் அருகே சிமென்ட் சாலைபோடும் பணி நடந்தது. அதில் அப்பகுதி கவுன்சிலர் ஒரு மாதிரியாகவும், பொறியாளர் வேறு விதமாகவும் சாலை போடுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
அதனால் யாருடைய அறிவுரையை கேட்பது என புரியாமல் ஒப்பந்ததாரர் குழம்பினார்.
அதனால் தொடர்ந்து சாலைப்பணி மேற்கொள்ளக்கூடாது என பொறியாளர் தடுத்து நிறுத்தினார். அதனால் ஒப்பந்ததாரருக்கும், பொறியாளருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அதன் விளைவாக ஒப்பந்ததாரர் நேற்று மாநகராட்சி கமிஷனர் அனுவை சந்தித்து இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டி புகார் செய்துள்ளார்.