/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
3 பிள்ளைகளை வீட்டில் வைத்து பூட்டியதால் பரபரப்பு
/
3 பிள்ளைகளை வீட்டில் வைத்து பூட்டியதால் பரபரப்பு
ADDED : ஆக 11, 2025 06:54 AM
திட்டக்குடி : திட்டக்குடியில் கடன் பிரச்னையில் 3 பிள்ளைகளை வீட்டிற்குள் வைத்து பூட்டிய சம்பவத்தால் பரபரப்பு நிலவியது.
கடலுார் மாவட்டம், திட்டக்குடி, தி.இளமங்கலம் காலனியைச் சேர்ந்தவர் ரமேஷ் மனைவி வாசுகி,40; சென்னையில் தங்கி கூலி வேலை செய்கிறார். இவர், அதே பகுதியைச் சேர்ந்த செல்வம் மனைவி சந்திரா என்பவரிடம் 10 ஆண்டுகளுக்கு முன் கடன் வாங்கினார். இது தொடர்பாக வாசுகிக்கும், சந்திராவிற்கும் தகராறு ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த சந்திரா, நேற்று மாலை 6:00 மணிக்கு வாசுகியின் 3 பிள்ளைகளை வீட்டின் உள்ளே வைத்து பூட்டியதால் பரபரப்பு நிலவியது. தகவலறிந்த திட்டக்குடி சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பூட்டை திறந்து பிள்ளைகளை மீட்டனர்.