ADDED : நவ 17, 2024 02:47 AM

கடலுார்: கடலுார் பஸ் நிலையத்தில் 71வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு கூட்டுறவு விற்பனை மேளா நடந்தது.
கூட்டுறவுத் துறை மற்றும் கைத்தறி துறை ஆகியன இணைந்து விற்பனை மேளாவிற்கு ஏற்பாடு செய்திருந்தது. கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் ரவிச்சந்திரன் துவக்கி வைத்தார். விழாவில், பொது விநியோகத் திட்ட துணைப் பதிவாளர் இம்தியாஸ், சரக துணைப் பதிவாளர் துரைசாமி, கூட்டுறவு சார் பதிவாளர்கள் பாலகிருஷ்ணன், சந்திரசேகர், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குனர் தேவி உட்பட பலர் பங்கேற்றனர்.
விழாவில், சரவணபவ கூட்டுறவு பண்டக சாலை மூலமாக மளிகைப் பொருட்கள், கூட்டுறவு அமைப்புகளின் மூலமாக தயார் செய்யப்பட்ட எண்ணெய் வகைகள், மிளகாய் துாள், உளுந்து மற்றும் கைத்தறி துறை சார்பில் நெசவாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் தயாரிப்புகளான கைலி, சட்டைகள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டன.