ADDED : நவ 04, 2026 09:20 PM
அ நிறம் | அளவு
நெல்லிக்குப்பம்: டிரான்ஸ்பார்மரை உடைத்து ரூ.63 ஆயிரம் மதிப்புள்ள காப்பர் கம்பிகளை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
நெல்லிக்குப்பம் அடுத்த வெள்ளப்பாக்கத்தில் தேவநாதன் என்பவரது நிலத்தில் உள்ள டிரான்ஸ்பார்மரை, நேற்று (நவ.,3) இரவு மர்ம நபர்கள் உடைத்து அதில் இருந்த ரூ. 63 ஆயிரம் மதிப்புள்ள 100 கிலோ காப்பர் கம்பிகளை திருடி சென்றனர்.
இதுகுறித்து உதவி மின் பொறியாளர் அருள் கொடுத்த புகாரின் பேரில் நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.
