/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுாரில் காப்பர் ஒயர் திருடியவர் கைது
/
கடலுாரில் காப்பர் ஒயர் திருடியவர் கைது
ADDED : மே 25, 2025 02:53 AM
கடலுார்: கடலுார் அருகே டிரான்ஸ்பார்மரில் காப்பர் ஒயர் திருடியவரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
கடலுார் திருப்பாதிரிப்புலியூர் அடுத்த சாத்தங்குப்பம் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் பழுதடைந்த டிரான்ஸ்பார்மர் இருந்தது. நேற்று காலை அதிலிருந்த காப்பர் கம்பியை சிலர் திருடிக் கொண்டிருந்தனர். இவர்களை பொதுமக்கள் பிடிக்க முயன்றதில் ஒருவர் மட்டும் சிக்கினார்.
இவரை, திருப்பாதிரிப்புலியூர் போலீசில் ஒப்படைத்து புகார் செய்தனர். விசாரணையில், திருமானிக்குழியைச் சேர்ந்த கமல்,42; என்பது தெரிந்தது. உடன், போலீசார் வழக்குப் பதிந்து அவரை கைது செய்து, 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 15 கிலோ காப்பர் ஒயரை பறிமுதல் செய்தனர்.