தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/காப்பர் ஒயர் திருடியவர் கைது

காப்பர் ஒயர் திருடியவர் கைது

காப்பர் ஒயர் திருடியவர் கைது


UPDATED : நவ 13, 2026 03:16 PM

ADDED : நவ 13, 2026 03:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 13, 2026 03:16 PM ADDED : நவ 13, 2026 03:16 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: காப்பர் ஒயர் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

கம்மாபுரம் அடுத்த சிறுவரப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வமணி மகன் கனகராஜ், 35. விருத்தாசலம் பொன்னேரி பைபாஸ் பகுதியில் இவருக்கு சொந்தமான கட்டி முடிக்கப்படாத கட்டடம் உள்ளது.

இந்த கட்டடத்தில் பொருத்தப்பட்டிருந்த மோட்டாரின் காப்பர் ஒயர் கடந்த 7ம் தேதி திருடுபோனது. இதுகுறித்து கனகராஜ் கொடுத்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிந்து, அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி., பதிவுகளை ஆய்வு செய்தனர்.

அதில் கிடைத்த தகவலின் பேரில், காப்பர் ஒயர் திருடிய வி.குமாரமங்கலம் கிராமத்தை சேர்ந்த விஸ்வநாதன், 52. என்பவரை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us