ADDED : ஆக 08, 2025 02:25 AM

சிதம்பரம்: சிதம்பரம் ஸ்ரீராமகிருஷ்ணா அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் பவள விழா நடந்தது.
நிர்வாகக்குழுத் தலைவர் ராமநாதன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் திருநாவுக்கரசு முன்னிலை வகித்தார். உதவித் தலைமை ஆசிரியை சுந்தரி வரவேற்றார். முன்னாள் மாணவர்கள் சார்பில் கட்டப்பட்ட புதிய வகுப்பறைக் கட்டடத்தை பள்ளி செயலாளர் பாலசுப்பிரமணியன் திறந்து வைத்தார். தலைமை ஆசிரியர் சங்கரன் ஆண்டறிக்கை வாசித்தார்.
சிறப்பு விருந்தினர் எம். ஜி.ஆர்., மருத்துவப் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் சுதா சேஷையன் பேசினார். பல்வேறு போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவர்களுக்குப் பரிச வழங்கப் பட்டது. மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது.
வி.ஆர்.எஸ்., பொறியியல் கல்லுாரித் தலைவர் சரவணன், முன்னாள் மாணவர்கள் சங்க செயலாளர் மணி, வீனஸ்குமார், டாக்டர் நடராஜன், கவுன்சிலர்கள் ஜேம்ஸ் விஜயராகவன், அப்பு சந்திரசேகரன், அரசு மருத்துவக் கல்லுாரி டீன் திருப்பதி, டாக்டர்கள் ஜூனியர் சுந்தரேஷ், ரவிச்சந்திரன், ராமநாதன் பங்கேற்றனர். தமிழ் ஆசிரியர் கல்யாணராமன் நன்றி கூறினார்.