/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாநகராட்சி தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
/
மாநகராட்சி தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 20, 2024 06:30 AM

கடலுார் : கடலுார் மாநகராட்சி தொழிலாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
தலைவர் அரசகுமரன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் நாகப்பன், துணை செயலாளர் நாகராணி முன்னிலை வகித்தனர். செயலாளர் செல்வராஜ், துணை தலைவர் விநாயகமூர்த்தி, துணை செயலாளர் குமார் துவக்கவுரையாற்றினர். சி.ஐ.டி.யூ., மாவட்ட செயலாளர் பழனிவேல் சிறப்புரையாற்றினார்.
இதில், கடலுார் மாநகராட்சியில் 144 துாய்மைப் பணியாளர்களின் பணிக்காலத்தை பணிவரன்முறை செய்யப்பட்டதை அனுமதிக்க வேண்டும்.
இதுகுறித்து அரசாணையிட்டு பழைய ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
சங்க நிர்வாகிகள் பக்கிரி, கிருஷ்ணமூர்த்தி, பக்தவச்சலம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பொருளாளர் பஞ்சன் நன்றி கூறினார்.