/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ராமநத்தம் அருகே பி.டி.ஓ.,விடம் கவுன்சிலர்கள் வாக்குவாதம்
/
ராமநத்தம் அருகே பி.டி.ஓ.,விடம் கவுன்சிலர்கள் வாக்குவாதம்
ராமநத்தம் அருகே பி.டி.ஓ.,விடம் கவுன்சிலர்கள் வாக்குவாதம்
ராமநத்தம் அருகே பி.டி.ஓ.,விடம் கவுன்சிலர்கள் வாக்குவாதம்
ADDED : அக் 19, 2024 05:05 AM

ராமநத்தம் : ராமநத்தம் அருகே நிகழ்ச்சிக்கு வந்த பி.டி.ஓ.,விடம் வார்டு உறுப்பினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
ஊராட்சிகள் தோறும் குப்பைகள் மற்றும் கழிவுநீர் தேக்கத்தை அகற்றி சுகாதாரமாக பராமரிக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
அதன்படி, ராமநத்தம் அடுத்த தொழுதுார் ஊராட்சியில், மங்களூர் பி.டி.ஓ., தண்டபாணி துாய்மை பணிகளை துவக்கி வைத்து பார்வையிட்டார்.
இதனையறிந்த வார்டு உறுப்பினர்கள் மணிவண்ணன், சகுந்தலா, ராஜசேகர், ராமதாஸ் ஆகியோர், பி.டி.ஓ., தண்டபாணியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதில், ஊராட்சிக்கு வழங்கப்பட்ட துப்புரவு பணி வாகனங்களையும், துாய்மை காவலர்களையும், ஊராட்சி தலைவர் தனது ஒப்பந்த பணிக்கு பயன்படுத்துகிறார்.
இதனால், ஊராட்சி முழுவதும் குப்பைகள் அகற்றாமல் குவிந்துள்ளன. இது குறித்து ஒன்றிய அதிகாரிகளிடம் கூறியும் பலனில்லை என கூறி வாக்குவாதம் செய்தனர்.
அப்போது, உரிய விசாரணை செய்து ஊராட்சி முழுவதும் தினசரி குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என பி.டி.ஓ., தண்டபாணி உறுதியளித்தார்.
இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

