/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாற்றுத்திறனாளி நியமன கவுன்சிலர் தேர்வில் முறைகேடு; கவுன்சிலர்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகை
/
மாற்றுத்திறனாளி நியமன கவுன்சிலர் தேர்வில் முறைகேடு; கவுன்சிலர்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகை
மாற்றுத்திறனாளி நியமன கவுன்சிலர் தேர்வில் முறைகேடு; கவுன்சிலர்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகை
மாற்றுத்திறனாளி நியமன கவுன்சிலர் தேர்வில் முறைகேடு; கவுன்சிலர்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகை
ADDED : நவ 26, 2025 07:23 AM

திட்டக்குடி: திட்டக்குடியில் நியமன கவுன்சிலர் தேர்வில் முறைகேடு நடந்ததாகவும், காலியாக உள்ள சேர்மன் பதவியை மீண்டும் ஏற்படுத்த வேண்டும் என கவுன்சிலர்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில், மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன கவுன்சிலர் பதவி அளிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இவர்கள் தேர்தலில் போட்டியிடாமல் நியமன முறையில் உள்ளாட்சி மற்றும் நகர்ப்புற உள்ளாட்சியில் பதவி பெறும் வகையில், சட்டசபையில் மசோதா தாக்கல் செய்து நிறைவேற்றப்பட்டது.
தற்போது, அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சிகளிலும், தலா ஒரு தகுதியான (40 சதவீதம் மாற்றுத்திறன் கொண்டவர்) மாற்றுத்திறனாளி நபருக்கு, நியமன கவுன்சிலர் பதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, மாற்றுத்திறனாளிகள் தகுதி சான்றிதழ் பெற்று விண்ணப்பித்தனர்.
கடலுார் மாவட்டம், திட்டக்குடி நகராட்சியில் 6 மாற்றுத்திறனாளிகள் நியமன கவுன்சிலர் பதவிக்கு விண்ணப்பித்தனர்.
இவர்களின் விண்ணப்பத்தை நகராட்சி நிர்வாகம் கலெக்டர் மற்றும் நகராட்சி அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்ய அனுப்பப்பட்டது.
அதில், ஒரு மாற்றுத்திறனாளி தேர்வு செய்து, அவரின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டு நகராட்சி அலுவலகத்திற்கு நியமன ஆணை வந்துள்ளது. இன்று அவருக்கு நியமன கவுன்சிலர் பதவிக்கான ஆணை வழங்க உள்ளது.
இதையறிந்த தி.மு.க., உட்பட, 10க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் நேற்று பகல் 12:00 மணியளவில் அலுவலகத்தை முற்றுகையிட்டு, நியமன கவுன்சிலர் தேர்வில் முறைகேடு நடந்துள்ளது என்றும், காலியாக உள்ள சேர்மன் பதவியை மீண்டும் ஏற்படுத்த வேண்டும் எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து நகராட்சி கமிஷனர் முரளிதரன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். அதில், நியமன கவுன்சிலர் பதவிக்கு 6 மாற்றுத்திறன் கொண்டவர்கள் விண்ணப்பித்தனர். விண்ணப்பம் கலெக்டருக்கு பரிந்துரைக்கு அனுப்பி வைத்தோம். அவர் பரிந்துரை செய்தவர்களுக்கு தான் நியமன ஆணை வழங்க முடியும்' என்றார். அதையேற்று பகல் 2:30 மணியளவில் அனைவரும் கலைந்து சென்றனர். இச்சமபவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

