/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கள்ளநோட்டு அச்சடித்த வழக்கு சொத்துகள் கோர்ட்டில் ஒப்படைப்பு
/
கள்ளநோட்டு அச்சடித்த வழக்கு சொத்துகள் கோர்ட்டில் ஒப்படைப்பு
கள்ளநோட்டு அச்சடித்த வழக்கு சொத்துகள் கோர்ட்டில் ஒப்படைப்பு
கள்ளநோட்டு அச்சடித்த வழக்கு சொத்துகள் கோர்ட்டில் ஒப்படைப்பு
ADDED : ஆக 07, 2025 03:01 AM
திட்டக்குடி: கள்ளநோட்டு அச்சடித்த வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கின் சொத்துகளை ராமநத்தம் போலீசார், திட்டக்குடி கோர்ட்டில் ஒப்படைத்தனர்.
கடலுார் மாவட்டம், ராமநத்தம் அடுத்த அதர்நத்தத்தை சேர்ந்தவர் செல்வம், 39; வி.சி., முன்னாள் நிர்வாகி. வேறு வழக்கு விசாரணைக்காக, செல்வத்தை தேடி கடந்த மார்ச் மாதம் ராமநத்தம் போலீசார், நிலத்தில் உள்ள வீட்டிற்கு சென்றபோது, அங்கு செல்வம் உட்பட 12 பேர் கொண்ட கும்பல் கள்ள நோட்டு அச்சடித்தது தெரிந்தது.
புகாரின்பேரில் ராமநத்தம் போலீசார் வழக்குப் பதிந்து செல்வம் உட்பட 12 பேரை கைது செய்து, திட்டக்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக பறிமுதல் செய்யப்பட்ட 3 கார், 2 லாரி, 1 பொக்லைன், 1 டிராக்டர் டிப்பர், கள்ள நோட்டு அச்சடிக்க பயன்படுத்திய இயந்திரம் உட்பட வழக்கு சம்பந்தமான அனைத்து சொத்துகளையும் திட்டக்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் ராமநத்தம் போலீ சார் நேற்று ஒப்படைத்தனர்.