ADDED : மார் 31, 2025 05:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காட்டுமன்னார்கோவில் : பெண் காவலரை தாக்கிய தம்பதியை போலீசார் கைது செய்தனர்.
காட்டுமன்னார்கோவில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ரகுமாறன் தலைமையில் தலைமை காவலர்கள் மகாலட்சுமி, கிருபா ஆகியோர் கடைவீதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, போக்குவரத்திற்கு இடையூறாக தள்ளு வண்டியில் பூக்கடையை வைத்திருந்த தம்பதி கருங்குடி கிராமத்தை சேர்ந்த செல்வமணி, 34; கீர்த்தனா, 31; ஆகியோரிடம் கடையை அப்பறப்படுத்துமாறு கூறினர்.
ஆத்திரமடைந்த தம்பதியினர், போலீசாருக்கு மிரட்டல் விடுத்து தலைமை காவலர் மகாலட்சுமியை கீழே தள்ளினர். இதில், காயமைடைந்த அவர் காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
போலீசார் வழக்குப் பதிந்து செல்வமணி, கீர்த்தனாவை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.