ADDED : மார் 16, 2025 07:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்; மங்கலம்பேட்டை அருகே மின்கம்பி திருடிய தம்பதியை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு, செங்கல்மேடு கனகராஜ் மகன் தமிழ்குமரன், 25, இவரது மனைவி கீதா, 18. இருவரும் டாடா ஏஸ் வேனில், பழைய இரும்புக்கு பாத்திரம் விற்றனர். நேற்று இரவு, ஆலடி அடுத்த கொட்டாரகுப்பம் ஆஞ்சநேயர் கோவில் அருகே மின் வாரியத்துக்கு சொந்தமான 48 கிலோ எடையுடைய சுருள் கம்பிகள் வைக்கப்பட்டிருந்தன.
இதனை, டாடா ஏஸ் வேனில் ஏற்றிய தமிழ்குமரன், அதனை விற்பதற்கு, மங்கலம்பேட்டை வந்தார்.
தகவலறிந்த சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையிலான போலீசார் மடக்கிப் பிடித்து, தமிழ்குமரன், கீதாவை கைது செய்து, வேனை பறிமுதல் செய்தனர்.