/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கவரிங் நகை வியாபாரிகள் சங்க ஆலோசனைக் கூட்டம்
/
கவரிங் நகை வியாபாரிகள் சங்க ஆலோசனைக் கூட்டம்
ADDED : ஏப் 16, 2025 08:20 PM

சிதம்பரம்: தமிழ்நாடு விஸ்வகர்ம முன்னேற்ற சங்கம் சார்பில் சிதம்பரம் கவரிங் நகை வியாபாரிகள் சங்கம் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
சிதம்பரத்தில் நடந்த கூட்டத்தில், தமிழ்நாடு விஸ்வகர்ம முன்னேற்ற சங்க மாநில தலைவர் சேகர் தலைமை தாங்கினார். தொழிற்சங்க செயலாளர் ராமச்சந்திரன், கவரிங் நகை வியாபாரிகள் சங்க தலைவர் முத்துக்குமரன், சாம்ராஜ், ராஜ்குமார் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் முத்துக்குமார் வரவேற்றார்.
லால்புரத்தில் 5 ஏக்கரில் 1.24 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில், கவரிங் நகை சிறப்பு தொழிற்பேட்டை அமைக்கப்படும் என, அறிவித்த தமிழக முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, பரிந்துரை செய்த அமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர் அன்பரசன் ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பது. கவரிங் நகைகளுக்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
துணை செயலாளர்கள் பாலசுப்பிரமணியன், சுரேஷ், கவரிங் நகை உற்பத்தியாளர்கள் ரவி, தண்டபாணி, ராஜேஷ், வெங்கடேசன், வெங்கடேஷ், சதீஷ், சிவராமன், சக்திவேல், ஞானசேகர், நடராஜன், தியாகராஜன், உமர் பாரூக், தில்லை நடராஜன், மாரியப்பன், சிவக்குமார், கனகசபை, பாலாஜி, கிருஷ்ணகுமார், சிவக்குமார், சேகர், சிதம்பரநாதன், சோமசுந்தரம், செந்தில்நாதன் பங்கேற்றனர். மாநில இளைஞர் அணி செயலாளர் ரமேஷ் நன்றி கூறினார்.