ADDED : மார் 20, 2024 11:45 PM

நெய்வேலி, : நெய்வேலி நகரில் தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றிடும் வகையில் அனைத்துக்கட்சி கொடிக்கம்பங்கள் மற்றும் அனைத்து கட்சி தலைவர்களின் சிலைகளையும் திரைபோட்டு மறைக்கும் பணிகள் துவங்கியது.
என்.எல்.சி., நகர நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நெய்வேலி நகரம் முழுவதும் நகரின் அடையாளங்களாக திகழும் கட்சி தலைவர்களின் சிலைகள், மற்றும் அனைத்துக்கட்சியினரின் கொடிக்கம்பங்களை திரை போட்டு மூடும் பணியில் நகர நிர்வாகத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், நெய்வேலி நகரம் முழுவதும் உள்ள சுவர் விளம்பரங்களை அழிக்கும் பணியும் துவங்கியுள்ளது.
நெய்வேலி நகரில் உள்ள வீடுகள் மற்றும் அலுவலகங்கள் அனைத்தும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி., கட்டுப்பாட்டில் உள்ளதால் நெய்வேலி நகருக்குள் எங்கும் சுவர் விளம்பரம் உள்ளிட்ட எந்த விளம்பரங்களுக்கும் அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்து.

