/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார் சப் கலெக்டர் அலுவலகத்தில் மாடுகளுடன் குடியேறும் போராட்டம்
/
கடலுார் சப் கலெக்டர் அலுவலகத்தில் மாடுகளுடன் குடியேறும் போராட்டம்
கடலுார் சப் கலெக்டர் அலுவலகத்தில் மாடுகளுடன் குடியேறும் போராட்டம்
கடலுார் சப் கலெக்டர் அலுவலகத்தில் மாடுகளுடன் குடியேறும் போராட்டம்
ADDED : பிப் 17, 2024 05:39 AM

கடலுார் : மனைப்பட்டா மாற்றம் குறித்து நடவடிக்கை எடுக்காததால், மாடுகளுடன் கடலுார் சப் கலெக்டர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
பண்ருட்டி அடுத்த வடக்கு சாத்திப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் வைத்தீஸ்வரன். இவருக்கு சொந்தமான 5 சென்ட் மனைக்கு, மிகவும் குறைவான அளவில் அதிகாரிகள் பட்டா மாற்றம் செய்துள்ளனர். இதையறிந்த வைத்தீஸ்வரன் முழுமையாக பட்டா மாற்றம் செய்யக்கோரி, ஆர்.டி.ஓ.,விடம் மனு கொடுத்து, அளவீடு செய்ய கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது. ஆனால், மனு மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், மனமுடைந்த அவர், தனது இரண்டு மாடுகளுடன் கடலுார் சப் கலெக்டர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டார்.
இதைக்கண்ட அலுவலக ஊழியர்கள், மனு மீது நடவடிக்கை எடுப்பதாக அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து, அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.