/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வாய்க்காலில் தவறி விழுந்த பசு மீட்பு
/
வாய்க்காலில் தவறி விழுந்த பசு மீட்பு
ADDED : டிச 18, 2025 06:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: வடிகால் வாய்க்காலில் தவறி விழுந்த பசுவை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.
விருத்தாசலம் ஜங்ஷன் சாலையில் உள்ள வடிகால் வாய்க்காலில், சாலையில் சுற்றித்திரிந்த பசு ஒன்று நேற்று முன்தினம் தவறி விழுந்தது. பலமுறை முயன்றும் அந்த பசுவால் வெளியே வர முடியாமல் திணறியது. இதைப்பார்த்த பொதுமக்கள், விருத்தாசலம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில், அங்குவந்த தீயணைப்பு வீரர்கள், வாய்க்கா லில் சிக்கி இரு ந்த பசுவை 40 நிமிடம் போராடி மீட்டனர்.

