/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கிணற்றில் விழுந்த பசு மாடு மீட்பு
/
கிணற்றில் விழுந்த பசு மாடு மீட்பு
ADDED : ஏப் 27, 2025 07:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் : விருத்தாசலம் அடுத்த தே.கோபுராபுரத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம், 60. இவரது பசுமாடு நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு, அதே பகுதியைச் சேர்ந்த பவழக்கொடி என்பவரது நிலத்தில் உள்ள 80 அடி ஆழமுள்ள உறை கிணற்றில் தவறி விழுந்தது.
தகவலறிந்து வந்த மங்கலம்பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் பாண்டியன், அழகுராஜ், முகமது புன்னியாமீன், சிவசங்கரன் ஆகியோர் அடங்கிய குழுவினர் 2 மணி நேரம் போராடி பசுவை மீட்டனர்.