/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாநகராட்சி சாலையில் சுற்றித்திரிந்த மாடுகள் பிடிப்பு
/
மாநகராட்சி சாலையில் சுற்றித்திரிந்த மாடுகள் பிடிப்பு
மாநகராட்சி சாலையில் சுற்றித்திரிந்த மாடுகள் பிடிப்பு
மாநகராட்சி சாலையில் சுற்றித்திரிந்த மாடுகள் பிடிப்பு
ADDED : டிச 27, 2024 11:07 PM

கடலுார்: கடலுாரில் சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்து அடைத்து வைத்தனர்.
கடலுார் மாநகராட்சிக்குட்பட்ட 45 வார்டு பகுதிகளிலும் வாகன போக்குவரத்திற்கு இடையூறாகவும் பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவியருக்கு பாதிப்பு ஏற்படும் வகையில், சாலையில் கால்நடைகள் சுற்றித்திரிகிறது. இந்த கால்நடைகள் பிடிக்கப்பட்டு, காப்பகத்திற்கு கொண்டு செல்லப்படுவதுடன், உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என கலெக்டர் தெரிவித்திருந்தார்.
இதை தொடர்ந்தும், கால்நடைகள் வளர்ப்போர் மாடுகளை சாலைகளில் விடுவதை கட்டுப்படுத்தவில்லை.
இதனால், சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை, மாநகராட்சி ஊழியர்கள் பிடித்து, உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். அதன்படி, கடலுார் சாவடியில் நேற்று சாலைகளில் சுற்றித்திரிந்த 15 மாடுகளை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்தனர். பின், பாபு கலையரங்கத்தில் அடைத்து வைத்து, மாடுகளுக்கு உரிமைக்கோரி வருபர்களுக்கு 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

