/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சாலையில் திரியும் மாடுகள் வாகன ஓட்டிகள் அச்சம்
/
சாலையில் திரியும் மாடுகள் வாகன ஓட்டிகள் அச்சம்
ADDED : செப் 27, 2025 02:16 AM
மந்தாரக்குப்பம் : மந்தாரக்குப்பம் கடைவீதியில் சுற்றிதிரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கிக் கொள்கின்றனர்.
கடலுார்-சேலம் தேசிய நெடுஞ்சாலை வழியாக தினசரி நுாற்றுக்கணக்கான லாரி, பஸ், வேன், கார், இருசக்கர வாகனங்கள் செல்கின்றன.
இந்த சாலையில் மந்தாரக்குப்பம் பகுதியில் மாடுகள் வளர்ப்போர் தங்கள் மாடுகளை வீட்டில் வைத்து பராமரிக்காமல் தேசிய நெடுஞ்சாலைகளில் சுற்றித் திரிய விடுவதால் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.
குறிப்பாக, வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி காயமடைகின்றனர்.
கடந்த வாரம் பெரியாக்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்த வாலிபர் மீது மாடு மோதிய விபத்தில் அவர் நிலை தடுமாறி கீழே விழந்து இறந்தார்.
இதே போன்று, கடந்த மாதம் இதே பகுதியில் பைக்கில் சென்று கொண்டிருந்த என்.எல்.சி., நிரந்தர தொழிலாளி, குறுக்கே வந்த மாடு மோதியதில் இறந்தார்.
இதுபோன்ற சம்பவங்களை தடுக்க சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.