UPDATED : நவ 11, 2026 05:17 PM
ADDED : நவ 11, 2026 05:14 PM

விருத்தாசலம்: தாலுகா அலுவலகத்திற்கு அடிப்படை வசதி கோரி, மா.கம்யூ., கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
விருத்தாசலம் தாலுகா அலுவலகத்திற்கு பல்வேறு அலுவல்களுக்கு நுாற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் தினசரி வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் தாலுகா அலுவலக வளாகத்தில் குடிநீர், கழிவறை வசதி இல்லை. இதனால் தாலுகா அலுவலகம் வரும் பொதுமக்கள் தினசரி அவதியடைந்து வருகின்றனர்.
இந்நிலையில், தாலுகா அலுவலக வளாகத்தில் குடிநீர், கழிவறை வசதி அமைத்து தர கோரி, மா. கம்யூ., சார்பில், தாலுகா அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு, ஒன்றிய செயலர் கலைச்செல்வன் தலைமை தாங்கினார். பழங்குடி மக்கள் நல சங்க மாவட்ட செயலாளர் அசோகன், அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்க மாநில குழு உறுப்பினர் ரவீந்திரன் முன்னிலை வகித்தனர்.
ஒன்றிய குழு நிர்வாகிகள் சந்தனமேரி, கனகராசு, பாலாஜி, விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்ட குழு உறுப்பினர் சக்திவேல், பழங்குடி சங்க வட்ட தலைவர் சண்முகம், கிளை நிர்வாகிகள் கதிர்வேல், செங்கோல், திலகவதி மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
அதன்பின், தாசில்தார் முருகனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். மமனுவை பெற்றுக்கொண்ட தாசில்தார் முருகன், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
அதன்பின் அனைவரும் கலைந்து சென்றனர்.
