அண்ணா விளையாட்டரங்கில் கிரிக்கெட் பயிற்சி முகாம்
அண்ணா விளையாட்டரங்கில் கிரிக்கெட் பயிற்சி முகாம்
ADDED : ஏப் 27, 2026 05:52 PM
கடலுார்: கடலுார் மாவட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான கிரிக்கெட் பயிற்சி முகாம் வரும் மே 1ம் தேதி முதல் 21ம் தேதி வரை நடக்கிறது.
இது குறித்து கடலுார் மாவட்ட கிரிக்கெட் சங்க செயலர் கூத்தரசன் விடுத்துள்ள அறிக்கை;
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மற்றும் கடலுார் மாவட்ட கிரிக்கெட் சங்கம் இணைந்து நடத்தும் கடலுார் மாவட்டத்திற்கு உட்பட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான கிரிக்கெட் பயிற்சி முகாம் வரும் மே மாதம் 1ம் தேதி முதல் 21ம் தேதி வரை அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடக்கிறது. இப்பயிற்சி முகாம் காலை 6 மணிக்கு துவங்கி காலை 9 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் 6 மணி வரை நடக்கிறது.
இப்பயிற்சி முகாம் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க பயிற்சியாளர் ராகுல் பயற்சி அளிக்கிறார். கடலுார் கிரிக்கெட் வீரர்கள் இந்த பயிற்சி முகாமில் கலந்து கொண்டு கிரிக்கெட் பயிற்சி பெறலாம். பயிற்சியில் பங்குபெறும் வீரர்கள் வெள்ளை நிற உடை, வெள்ளை நிற காலணி அணிந்து வர வேண்டும். இப்பயிற்சி கடலுார் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பாக இலவசமாக கற்றுத்தப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
