sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

க்ரைம் பீட்

/

க்ரைம் பீட்

க்ரைம் பீட்

க்ரைம் பீட்


ADDED : நவ 17, 2024 02:47 AM

Google News

ADDED : நவ 17, 2024 02:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிலாப் சரிந்து முதியவர் சாவு

பரங்கிப்பேட்டை அடுத்த பெரியகுமட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி, 69; இவர,் நேற்று முன்தினம் அதே பகுதியில் மாடு மேய்த்து கொண்டிருந்தார். அப்போது, நெடுஞ்சாலை பணிக்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்த சிமென்ட் சிலாப் அருகில் உட்கார்ந்திருந்தபோது, சிலாப் சரிந்து அவர் மீது விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த அவர், சிதம்பரம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேக்கப்பட்டு இறந்தார்.

பரங்கிப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

பைக் திருடியவர் கைது

விருத்தாசலம் அடுத்த கார்குடல் கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து மகன் வீரமணி, 23; கூலி தொழிலாளி. வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த இவரது பைக்கை, கடந்த 12ம் தேதி இரவு காணவில்லை. புகாரின்பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். அப்போது, கார்குடல் கொளஞ்சி மகன் சுரேஷ், 28, என்பவர் பைக்கை திருடியது தெரியவந்து கைது செய்தனர்.

இளம்பெண் தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் அடுத்த காந்தலவாடி முனுசாமி மகள் ேஷாபனா, 27. இவருக்கும் விருத்தாசலம் அடுத்த புலியூர் காலனி சுரேந்தர் என்பவருக்கும்5 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி, விஜயவர்ஷினி, 3, என்ற பெண் குழந்தை உள்ளது.

அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த ேஷாபனா, கடந்த 13ம் தேதி காலை, வீட்டில் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை முனுசாமி புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். வரதட்சணை கொடுமையாக இருக்குமோ என, ஆர்.டி.ஓ., விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

விபத்தில் தொழிலாளி பலி

பெண்ணாடம் அடுத்த மாளிகைக்கோட்டம், மெயின்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 47. போர்வெல் தொழிலாளி.

கடந்த 31ம் தேதி, கோனுாரில் வேலை முடித்து விட்டு பைக்கில் தாழநல்லுார் - பெண்ணாடம் சாலையில் வந்தார். நந்திமங்கலம் பஸ் நிறுத்தம் வந்தபோது, அவ்வழியே வந்த பல்சர் பைக் மோதியதில், படுகாயமடைந்தார். திருச்சி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் இறந்தார் பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

ரயில்வே ஊழியர் வீட்டில் திருட்டு

கடலுார் கூத்தப்பாக்கம் நாதன்நாயகி நகரை சேர்ந்தவர் பரந்தாமன் மனைவி நர்மதா தேவி,35. பரந்தாமன், திருச்சி ரயில்வேயில் ஊழியராக பணிபுரிகிறார். நேற்று முன்தினம் பரந்தாமன் வேலைக்கு சென்றுவிட்ட நிலையில், நர்மதாதேவி அருகிலுள்ள உறவினர் வீட்டுக்குசென்றார். மாலை மீண்டும் வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் பின்பக்க கதவு திறந்துகிடந்த நிலையில் பீரோவிலிருந்து ஏழரை சவரன் நகை திருடுபோனது கண்டு அதிர்ச்சியடைந்தார். புகாரின் பேரில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

தவறி விழுந்தவர் சாவு

புவனகிரி தாலுகா, மருதுார் அருகே பு.கொளக்குடியை சேர்ந்தவர் ராமலிங்கம், 60; விவசாயி. கடந்த 10ம் தேதி காலை வீட்டில் தவறி விழுந்து காயமடைந்தார். சிதம்பரம் மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்றவர் நேற்று இறந்தார்.

மருதுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

கல்லுாரி மாணவி மாயம்

கடலுார், செம்மண்டலத்தைச் சேர்ந்தவர் சேகர் மகள் கவிதா,19; தனியார் கல்லுாரியில் முதலாமாண்டு மாணவி. கடந்த 6ம் தேதி கல்லுாரிக்கு சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து சேகர் அளித்த புகாரின் பேரில், கடலுார், புதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

மனைவி தாக்கு: கணவருக்கு வலை

பண்ருட்டி அடுத்த தெற்கு சாத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சுபாஷ்சந்திரபோஸ், 27; இவரது மனைவி வினோலியா,25; கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். கடந்த 14 ம் தேதி பண்ருட்டி கடலுார் சாலையில் உள்ள திருமண மண்டபம் அருகே சென்ற வினோலியாவை, கணவர் சுபாஷ்சந்திரபோஸ் வழிமறித்து தாக்கினார். வினோலியா புகாரில் சுபாஷ்சந்திரபோஸ் மீது பண்ருட்டி போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.

கடனை திருப்பி கேட்டவர் தாக்கு

விருத்தாசலம் அடுத்த தொரவளூர் காலனியை சேர்ந்தவர் வீரமுத்து மகன் மோகன், 50. இவர், அதே பகுதியை சேர்ந்த ராமர் மகன் சத்தியநாராயணன், 36, என்பவருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு தனியார் வங்கியில் கடன் வாங்கி கொடுத்திருந்தார். கடனை திருப்பி செலுத்தாமல், கடந்த 12ம் தேதி, இதுகுறித்து சத்தியநாராயணனின் மோகன் கேட்டுள்ளார்.

ஆத்திரமடைந்த சத்தியநாராயணன் கையில் வைத்திருந்த டார்ச் லைட்டால் தாக்கி மிரட்டல் விடுத்தார். காயமடைந்த மோகன் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.

இது குறித்த மோகன் கொடுத்த புகாரில், சத்தியநாராயணன் மீது விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.

விபத்தில் கொத்தனார் பலி

கடலுார், பழைய வண்டிப்பாளையத்தைச் சேர்ந்தவர் பாலன் மகன் பக்கிரிசாமி, 29; கொத்தனார். இவர், திருப்பாதிரிப்புலியூர் ரயில்வே மேம்பாலத்தில் நேற்று முன்தினம் பைக்கில் சென்றார். எதிரில் வந்த ஆட்டோ மோதி பலத்த காயமடைந்தார். கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் இறந்தார்.

கடலுார், திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us